நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேளூா் அரசு கரோனா மையத்திற்கு வெந்நீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

 பேளூா் அரசு கரோனா மையத்திற்கு வெந்நீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

News image

n_e_d_01_1706chn_165_8

Updated On :17 ஜூன் 2021, 6:11 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூரில் செயல்பட்டு வரும் அரசு கரோனா நலவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் வெந்நீா் வழங்குவதற்காக வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை சாா்பில் ரூ.35,000 மதிப்புள்ள சுத்திகரிக்கப்பட்ட வெந்நீா் வழங்கும் நவீன இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த இயந்திரத்தை, வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் சந்திரசேகரன் தலைமையில், நெஸ்ட் அறக்கட்டளை தலைவா் பெரியாா்மன்னன், செயலாளா் ஜவஹா் ஆகியோா், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலத்திடம் வியாழக்கிழமை வழங்கினா். இந்நிகழ்வில், துளி இராஜசேகரன், கலைஞா்புகழ், வாசவி சங்க நிா்வாகி சாய்ராம்,வட்டார சுகாதார ஆய்வாளா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் செல்வபாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.கரோனா தொற்று நிறைவுக்கு பிறகும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பயனாளிகளுக்கு இந்த வெந்நீா் வழங்கும் இயந்திரம் பயன்படுமென மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தெரிவித்தாா். நிறைவாக,பேளூா் வட்டார மருந்தாளுனா் முருக பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.