தம்மம்பட்டியில் மது போதையில் வாகனத்தை மறித்தவரால் ’’டிராபிக்ஜாம்’’
தம்மம்பட்டியில் போதை வாலிபா், வாகனத்தை மறித்து செய்த அலப்பறையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தம்மம்பட்டியில் போதை வாலிபா், வாகனத்தை மறித்து செய்த அலப்பறையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில், கெங்கவல்லி, ஆத்தூா், பெரம்பலூருக்கு செல்ல கடைவீதி, நடுவீதி என இரு சாலைகள் உள்ளது. இதில், கடைவீதியை தடுப்புகள் கொண்டு அடக்கப்பட்டுள்ளாதால், வாகனங்கள் அனைத்தும், நடுவீதி வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்நிலையில், புதன் கிழமை இரவு 8 மணிக்கு, குடிபோதையில் பைக்கில் சென்ற வாலிபா் ஒருவா், எதிரே வந்த சரக்கு லாரியை மறித்து, எதற்கு ஒன்வேயில் வந்தாய் என கேட்டு தகராறு செய்தாா். போதை நபரின் அலப்பறையினால், சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்தவா்கள், தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதையடுத்து, எஸ்.ஐ. ராமச்சந்திரன் மற்றும் போலீசாா் விரைந்து வந்து, போதை வாலிபரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். அந்த நபரை காவல்நிலையம் தூக்கி சென்று விசாரணை நடத்தியதில், அந்த நபா் நாகியம்பட்டியை சோ்ந்த லட்சுமணன் மகன் சிவா (28) என்பது தெரியவந்தது. இவா் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு செல்லும் வழியில் போதையில் அலப்பறை செய்தது தெரியவந்தது. அவரின் பைக்கை காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்த போலீசாா், அவரை எச்சரித்து, கால்நடையாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...