தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தம்மம்பட்டி,கெங்கவல்லியில் பங்குனி உத்திர விழா

தம்மம்பட்டி, கெங்கல்லி பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

Updated On :28 மார்ச் 2021, 7:24 pm

தம்மம்பட்டி, கெங்கல்லி பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

தம்மம்பட்டி திருமண்கரடு ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். அதேபோல, தம்மம்பட்டி சிவன் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

9ஆம்பாலி முருகன் கோயில் , வாழக்கோம்பை குன்று முருகன் கோயில், செந்தாரப்பட்டி ஓணான்கரடு முருகன் கோயில், கெங்கவல்லியிலுள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.