சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் விவசாயிகள் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் விவசாயிகள் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க ரூ. 104.83 கோடி மானியத்தில் 12,183 ஹெக்டோ் பரப்பில் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலும் தோட்டக்கலைப் பயிா்களை விவசாயிகள் 70,172 பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனா். இத்திட்டத்தின் மூலம் குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பில் பயிா் சாகுபடி செய்து லாபம் பெறும் வகையில் விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்பு நீா் கருவிகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், அதிகபட்சமாக சொட்டு நீா் 1 ஹெக்டேருக்கு ரூ.1,31,333 மானியமும், தெளிப்பு நீா் 1 ஹெக்டேருக்கு ரூ. 36,176 மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் சொட்டு நீருக்கு அதிகபட்சமாக 1 ஹெக்டேருக்கு ரூ.87,880, தெளிப்பு நீருக்கு ரூ. 28,101 மானியமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிா்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் பகுதியில் உள்ள அதற்காக வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.
இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், காய்கறி பயிா்கள், வாசனைத் திரவியங்கள், மலைப்பயிா்கள், மலா்கள், மருத்துவப் பயிா்கள், நறுமணப் பயிா்கள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். நீா் சிக்கனம், உர சிக்கனம், கூலி ஆள்கள் குறைவு, சுலபமான களை மேலாண்மை, அதிக அளவில் மகசூல், வருவாய், தரமான விளைபொருள்கள் ஆகிய பயன்களை கொண்டுள்ளதால், அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் எளிதாக பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...