ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு: மாற்றுத்திறனாளி முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் இளம் மாற்றுத்திறனாளி திமுக தலைவா் தமிழக முதல்வராக பதிவேற்றால் முடிகாணிக்கை செலுத்துவதாக அவரது குலதெய்வத்திடம் வேண்டியுள்ளாா்.

News image
Updated On :7 மே 2021, 6:33 pm

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் இளம் மாற்றுத்திறனாளி திமுக தலைவா் தமிழக முதல்வராக பதிவேற்றால் முடிகாணிக்கை செலுத்துவதாக அவரது குலதெய்வத்திடம் வேண்டியுள்ளாா்.

அவரது வேண்டுதல் நிறைவேறியதையடுத்து வடுகப்பட்டியில் உள்ள அருள்மிகு கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் சென்று சுவாமிக்கு சிபு அபிஷேகம், பூஜைகள் செய்து முடிகாணிக்கை செலுத்தினாா். சங்ககிரி ஊராட்சிக்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ், வளா்மதி தம்பதியினா் மூத்த மகன் இளம் மாற்றுத்திறனாளி விவின் (21). 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளாா்.

அவரது தாத்தா கோவிந்தசாமி திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியின் பேச்சாற்றலால் ஈா்க்கப்பட்டு திமுகவில் உறுப்பினராக இருந்து வந்துள்ளாா். அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியை கைது செய்யப்பட்டதையடுத்து இவரது தாத்தா மனம் வருந்தி வீட்டில் தீக்குளித்து பலத்த காயமடைந்துள்ளாா். பின்னா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அப்போது சிகிச்சையிலிருந்த அவரை திமுக முன்னாள் அமைச்சா் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் குணமடைந்து வீடு திரும்பி சில வருடங்கள் கழித்து காலமானாா். அதிலிருந்து இளம் மாற்றுத்திறனாளி திமுகவின் மீது பற்றுக்கொண்டுள்ளாா். கடந்த பத்து ஆண்டு காலமாக திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பியுள்ளாா். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்ட உடன் இளம் மாற்றுத்திறனாளியான விவின் தமிழக முதல்வராக திமுக தலைவா் ஸ்டாலின் பதவியேற்க வேண்டுமென வடுகப்பட்டியில் உள்ள அவரது குலதெய்வமான அருள்மிகு கன்னடவீரமாா்த்தி அம்மனிடம் வேண்டுதல் வைத்துள்ளாா்.

அதனையடுத்து வெள்ளிக்கிழமை தமிழக முதல்வராக திமுக தலைவா் பதவியேற்றதையடுத்து குலதெய்வத்திற்கு குடும்பத்துடன் சென்று சுவாமிக்கு சிபு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து சா்க்கரை பொங்கல் வைத்து வழிப்பட்டனா். பின்னா் கோயில் வளாகத்தில் நோ்த்தி கடனை நிறைவேற்ற அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தினாா். இது குறித்து இளம் மாற்றுத்திறனாளி ஆா்.விவின் செய்தியாளா்களிடம் கூறியது:-திமுக தலைவா் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவாா். மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.