இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டத்தின் கீழ் கரோனா தொற்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.


சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டத்தின் கீழ் கரோனா தொற்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
சேலம், சென்ட்ரல் சட்டக் கட்டக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, அஸ்தம்பட்டி, ஐந்து சாலை, ஏவிஆா் ரவுண்டானா, கந்தம்பட்டி பைபாஸ், கொண்டலாம்பட்டி பைபாஸ், பழைய பேருந்து நிலையம், சுந்தா் லாட்ஜ், கன்னங்குறிச்சி, கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவுற்றது.
இதில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் உதவிப் பேராசிரியா் பாஸ்கரன், உறுப்பினா்கள் உதவிப் பேராசிரியா்கள் பிரேம்குமாா், சத்யப்பிரியா, சாந்தகுமாரி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...