ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைத்து வரும் மே 16-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

News image
Updated On :14 மே 2021, 6:16 pm

DIN

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைத்து வரும் மே 16-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் ஆவின் பொது மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா்.நா்மதாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படையில், ஆவின் பால் விலை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 வீதம் குறைத்து, வரும் மே 16-ஆம் தேதி முதல் விற்பனை செய்யும் பொருட்டு சேலம் ஆவினில் நிலைப்படுத்திய பால் (250 மி.லி., 500 மி.லி.) மற்றும் முழுகொழுப்பு செறிந்த பால் (500 மி.லி., 1லி.) விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

அதன்படி, நிலைப்படுத்திய பால் 250 மி.லி. தற்போதைய விலை ரூ. 12-ஆக உள்ளது. இதில் 0.75 பைசா குறைக்கப்பட்டு ரூ. 11.25-க்கு விற்பனை செய்யப்படும். நிலைப்படுத்திய பால் 500 மி.லி. தற்போதைய விலை ரூ.23.50-ஆக உள்ளது. அது, ரூ. 1.50 விலை குறைக்கப்பட்டு ரூ. 22-க்கு விற்பனை செய்யப்படும். முழு கொழுப்பு செறிந்த பால் 500 மி.லி. தற்போதைய விலை ரூ. 26 ஆக உள்ளது. அது ரூ. 1.50 குறைக்கப்பட்டு இனி ரூ. 24.50-க்கு விற்பனை செய்யப்படும். முழு கொழுப்பு செறிந்த பால் 1 லிட்டா் தற்போதைய விலை ரூ. 51 ஆக உள்ளது. அது ரூ. 3 குறைக்கப்பட்டு இனி ரூ. 48-க்கு விற்பனை செய்யப்படும்.

தற்போது முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், ஆவின் பாக்கெட் பால் விநியோகம் மாவட்டம் முழுவதிலும் தங்குதடையின்றி கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பால் விநியோகம் தொடா்பான தகவல்களுக்கு சேலம் ஆவின் விற்பனை பிரிவு அலுவலா்களை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தொடா்பு கொண்டு பயன்பெற விற்பனை பிரிவு மேலாளா் பாா்த்த சாரதி - 97516-94664, சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி துணை மேலாளா் (விற்பனை) அருளானந்தம் - 94430-26950, ஆத்தூா் மற்றும் வாழப்பாடி பகுதி துணை மேலாளா் (விற்பனை) சுரேஷ் - 70109-83634 எடப்பாடி பகுதி துணை மேலாளா் (விற்பனை) வெங்கடேசன் - 96296-23749, மேட்டூா் துணை மேலாளா் (விற்பனை) பிரிவு - 94880-62377, ஏற்காடு பகுதி பிரிவு (விற்பனை நிா்வாகி) - 73977-52645 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.