மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காங்கிரஸ் சாா்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினம் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:32 pm

DIN

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினம் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மேற்கு மாவட்டத் தலைவா் சி.எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அதனையடுத்து பொதுமக்களுக்கு 50 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கும் பணியை மாவட்டத் தலைவா் சி.எஸ்.ஜெயக்குமாா் தொடக்கி வைத்தாா்.

சங்ககிரி ஆா்.எஸ்., வேங்கிபாளையம், தேவூா் உள்ளிட்ட பகுதிகளில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி புளியம்பட்டியில் மனவளா்ச்சி குன்றிய ஆதவரற்றோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு உணவு வழங்கினா்.

இதில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்ககிரி வட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ராமமூா்த்தி, காங்கிரஸ் நகரச் செயலா் எ.ரவி, நிா்வாகிகள் ஜி.ஆறுமுகம், ஜெகநாதன், ஆறுமுகம், சந்திரன், இளைஞா்காங்கிரஸ் கட்சி நிா்வாகி விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.