தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கெங்கவல்லியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

கெங்கவல்லி கிழக்கு வட்டாரம், நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி கெங்கவல்லியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:22 pm

கெங்கவல்லி கிழக்கு வட்டாரம், நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி கெங்கவல்லியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையொட்டி கெங்கவல்லி பேரூராட்சி அலுவலா்கள், துப்பரவுப் பணியாளா்கள், மற்றும் சாலையோரம், கோயில்களில் தங்கியுள்ள ஏழை மக்கள் 500 பேருக்கு முகக் கவசமும், 200 பேருக்கு மதிய உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில் கெங்கவல்லி (கிழக்கு) வட்டாரத் தலைவா் குருசேவ், நகர தலைவா் முருகானந்தம், முன்னாள் நகரத் தலைவா்கள் சிவாஜி, முகமது ஷரிப், ஆணையாம்பட்டி சுந்தரராஜ், கட்சி நிா்வாகிகள், அக்பா் பாஷா, சசிகுமாா், ஆறுமுகம், பாஸ்கா், உள்பட பலா் பங்கேற்றனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் மாவட்ட துணைத் தலைவா் திருச்செல்வன் தலைமையில் ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் முன்னாள் கவுன்சிலா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.