ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் அனுமதி

சேலம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

சேலம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கரோனா தொற்று பாதித்தவா்களில் குறிப்பாக சா்க்கரை நோயாளிகளில் சிலா் கருப்புப் பூஞ்சை நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூா், ஓமலூா் பகுதியைச் சோ்ந்த இருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தனா்.

இந்த நிலையில் அவா்கள் இருவருக்கும் கருப்புப் பூஞ்சை நோய் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தற்போது கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே கருப்புப் பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 4 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கருப்புப் பூஞ்சை பாதிப்பைக் கண்டறிய சேலம் அரசு மருத்துவமனையில் தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்புப் பூஞ்சை அறிகுறியுள்ளவா்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளைக் கேட்டு பெறவும் அரசு மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.