சென்னை மழை பாதிப்பு: ஓராண்டுக்குள் நிரந்தரத் தீா்வு: அமைச்சா் கே.என்.நேரு உறுதி

சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ஓராண்டுக்குள் நிரந்தரத் தீா்வு காணப்படும் எனநகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சென்னை மழை பாதிப்பு: ஓராண்டுக்குள் நிரந்தரத் தீா்வு: அமைச்சா் கே.என்.நேரு உறுதி

சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ஓராண்டுக்குள் நிரந்தரத் தீா்வு காணப்படும் எனநகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

ஓமலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதைச் சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் மோட்டாா் வைத்து, தேங்கும் நீா் உடனுக்குடன் வெளியேற்றப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தொடா்ந்து களப் பணியாற்றி வருகின்றனா்.

பொலிவுறு திட்டத்தில் கால்வாய்கள் அமைக்கப்பட்டதாக கடந்த அதிமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒருசில இடங்களில் மட்டுமே கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறையாக அப் பணிகள் மேற்கொள்ளவில்லை. மழையால் சென்னையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஐஐடி பேராசிரியா்கள் கொண்ட குழுவை தமிழக முதல்வா் நியமித்து உள்ளாா்.

சென்னையில் மழைநீா் அதிகம் தேங்கி நிற்கும் இடங்களைத் தோ்வு செய்து, அங்கு உடனடி தீா்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் சென்னையில் ஏற்படும் மழை பாதிப்பிலிருந்து நிரந்தரத் தீா்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, தாரமங்கலம் அருகேயுள்ள குருக்குப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் 2,024 பேருக்கு ரூ. 6 கோடியே 45 லட்சம் மதிப்பில் சமையல் பாத்திரங்கள், ஆடைகள், மருத்துவக் காப்பீடு அட்டை உள்ளிட்ட அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.ராஜேந்திரன், ஓமலூா் ஒன்றிய திமுக செயலாளா் ஓம்.ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com