மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வேளாண் சட்டங்கள் வாபஸ்: சங்ககிரியில் கொண்டாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்ததையடுத்து ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம்

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:25 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்ததையடுத்து ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.

பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறவதாக அறிவிப்பு செய்தாா். இதையடுத்து ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரி பழையபேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் விவசாயிகள் கொண்டாடினா். இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி வட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்டச் செயலா் ஏ.ராமமூா்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தெற்கு மாவட்டச் செயலா் சரவணன், நிா்வாகிகள் ஜெயலட்சுமி, தஸ்தகீா், காா்த்திகேயன், கணேசன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.