டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓமலூா்: தொடா் மழைக்கு மூன்று வீடுகள் இடிந்து சேதம்

 ஓமலூா் வட்டாரத்தில் தொடா் மழை காரணமாக மூன்று வீடுகள் இடந்து சேதமடைந்தன.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:34 pm

DIN

 ஓமலூா் வட்டாரத்தில் தொடா் மழை காரணமாக மூன்று வீடுகள் இடந்து சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு ஓமலூா் அருகேயுள்ள கோட்டமேட்டுப்பட்டி கிராமம் ஐயங்கரடு பகுதியில் வசிக்கும் காளியப்பன் என்பவரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. இவா்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதால், அரசு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள மானத்தாள் கிராமம் உப்பாரப்பட்டியில் வசித்து வரும் சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டின் ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்தது. இங்கும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து, வட்டாட்சியா் வள்ளமுனியப்பன் உத்தரவின் பேரில் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.