6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலத்தில் எரிவாயு உருளை வெடித்து 3 வீடுகள் தரைமட்டமானதில் மூதாட்டி பலி; 12 பேர் காயம்

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் மூன்று வீடுகள் சரிந்து விழுந்தன. இதில் மூதாட்டி ஒருவர் பலியானார்; 12 பேர் காயமுற்றனர்.

News image
எரிவாயு உருளை வெடித்ததில் இடிந்த வீட்டில் இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்
Updated On :23 நவம்பர் 2021, 5:14 am

DIN

சேலம்: சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் மூன்று வீடுகள் சரிந்து விழுந்தன. இதில் மூதாட்டி ஒருவர் பலியானார்; 12 பேர் காயமுற்றனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கருங்கல்பட்டி பாண்டு அரங்கநாதசாமி தெருவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு ஒன்றில் சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இதில் வெங்கட்ராஜன் என்பவரின் வீடும், கோபி என்பவரின் வீடும், பத்மநாபன் என்பவர் வீடும் இடிந்து விழுந்தது.

பத்மநாபன் சேலம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் என்பவரும் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இவரை மீட்கும் பணி தற்போது நடந்து வருகின்றது.

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்ததில் இடிந்த நிலையில் உள்ள வீடு

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்ததில் இடிந்த நிலையில் உள்ள வீடு

இந்தப் பகுதியில் மொத்தம் ஐந்து வீடுகள் உள்ள நிலையில், சமையல் எரிவாயு உருளை வெடித்ததில், அருகருகே இருந்த மூன்று வீடுகள் சரிந்துள்ளன. மற்ற இரண்டு வீடுகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கட்டட இடிபாட்டில் சிக்கிய ராஜலட்சுமி (80) என்ற மூதாட்டி உயிரிழந்துவிட்டார்.

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்த தகவலறிந்து அப்பகுதியில் திரண்ட அப்பகுதி பொதுமக்கள்.

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்த தகவலறிந்து அப்பகுதியில் திரண்ட அப்பகுதி பொதுமக்கள்.

இடிபாட்டில் சிக்கி காயமடைந்த வெங்கட்ராஜன், இந்திராணி, மோகன்ராஜ், நாகசுதா, கோபால், தனலட்சுமி, சுதர்சன், கணேசன், உஷாராணி, லோகேஷ், முருகன் கோபி ஆகிய 12 பேர் காயம் அடைந்தனர். இதில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் தீக்காயமடைந்த கோபி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Story image

சம்பவ இடத்திற்கு காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் வந்து அவர்களும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி ஆணையர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடம் வந்து விசாரித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.