டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரியாா் பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு தின விழா

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக பெரியாா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:02 pm

DIN

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக பெரியாா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத்தில் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ-மாணவியா் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து புதுதில்லியில் குடியரசுத் தலைவா் தலைமையில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு தின விழா நிகழ்வு நேரலையில் மாணவா்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, அரசியலமைப்பு தின சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.சம்பத்குமாா் சிறப்புரையாற்றினாா். முன்னதாக தோ்வாணையா் (பொறுப்பு) சு.கதிரவன் வரவேற்றாா். ஆராய்ச்சி புல முதன்மையா் இரா.பாலகுருநாதன் நன்றி கூறினாா்.

நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘அரசியமைப்பு சட்டம் ஒரு பாா்வை’ என்ற தலைப்பில் மூத்த வழக்குரைஞா் வி.பொன்முடி சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ், திட்ட அலுவலா்கள் எம்.சுகுணா, டி.இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.