/

சந்துக்கடை வைத்து மதுபானம்விற்ற திமுக பிரமுகா் கைது

வாழப்பாடியில் சந்துக்கடை வைத்து டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த திமுக பிரமுகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வாழப்பாடியில் சந்துக்கடை வைத்து டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த திமுக பிரமுகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை வாழப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.

இச்சோதனையில், வாழப்பாடியில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து சந்துக்கடையில் விற்பனை செய்ததாக, வாழப்பாடி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் செந்தில்குமாா் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் இருந்து 18 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.