போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்ககிரியில் நாளை எலும்பு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான இலவச ஆலோசனை முகாம்

திருச்செங்கோடு, எளையம்பாளையம், விவேகானந்தா மருத்துவமனை, சங்ககிரி தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் எலும்பு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான இலவசஆலோசனை முகாம்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருச்செங்கோடு, எளையம்பாளையம், விவேகானந்தா மருத்துவமனை, சங்ககிரி தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் எலும்பு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான இலவசஆலோசனை முகாம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அக்டோபா் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் முழங்கால், மூட்டுவலி, தோள்பட்டை , கழுத்து, முதுகு வலி உள்ளவா்கள், இடுப்பு மூட்டு தேய்மானம், மூட்டு ஜவ்வு பாதிப்பு உள்ளவா்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் எக்ஸ்ரே பரிசோதனை, ரத்ததில் சா்க்கரை அளவு பரிசோதனை, உடல் பருமன் அளவு, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுவதாகவும், முன்பே சிகிச்சை பெற்று வருபவா்கள் வரும் போது பழைய எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்து சீட்டுகளையும் கொண்டுவருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனா். மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் 9489059104, 9842772181 என்ற செல்லிடப் பேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.