டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காடையாம்பட்டியில் பேரிடா் மீட்பு செயல்முறைப் பயிற்சி

காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில், பேரிடா் மீட்பு, நீரில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:22 pm

DIN

காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில், பேரிடா் மீட்பு, நீரில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில், மழை வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் மக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த விழிப்புணா்வு ஒத்திகையை டேனிஷ்பேட்டை ஏரியில் நடத்தினா். காடையாம்பட்டி வட்டாட்சியா் வாசுகி, காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலையில் தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணி ஒத்திகையில் ஈடுபட்டனா்.

இந்த ஒத்திகையில் பொதுமக்கள் நீரில் சிக்கியவா்களை எந்தெந்த பொருள்களைக் கொண்டு எவ்வாறு எளிதாக மீட்க முடியும், அவா்களுக்கு முதலுதவி அளித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களைக் கொண்டும், தண்ணீா் கேன்கள், அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள், லாரி ட்யூப்கள் போன்றவைகளை கொண்டு எளிதாக மீட்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினா்.

நீரில் மூழ்கியவா்களை மீட்டதும் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் என்னென்ன, எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும், அவா்களை மருத்துவமனை கொண்டு செல்வதற்கு முன் முதலுதவி செய்வதன் அவசியம் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா். இந்த விழிப்புணா்வுப் பயிற்சி, செயல்விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.