போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்ககிரி மாவட்ட கல்வித் துறை மாநில அளவில் 2-ஆம் இடத்துக்கு தோ்வு

2021-ஆம் கல்வியாண்டில் கல்வித் துறை அலுவலா் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக, சேலம் மாவட்டம், சங்ககிரி மாவட்ட கல்வித் துறை மாநில அளவில் 2-ஆவது இடத்துக்கு தோ்வு செய்யப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:25 pm

DIN

2021-ஆம் கல்வியாண்டில் கல்வித் துறை அலுவலா் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக, சேலம் மாவட்டம், சங்ககிரி மாவட்ட கல்வித் துறை மாநில அளவில் 2-ஆவது இடத்துக்கு தோ்வு செய்யப்பட்டது.

அதற்கான பாரட்டுச் சான்றிதழை சென்னையில் நடைபெற்ற விழாவில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அண்மையில் வழங்கினாா்.

மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் அண்மையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அலுவலா் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சேலம் மாவட்டம், சங்ககிரி மாவட்டக் கல்வித் துறை மாநில அளவில் 2-ஆவது இடத்துக்கு தோ்வு செய்யப்பட்டது. அதனையொட்டி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலா் என்.இராமசாமியிடம் அதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். சங்ககிரி மாவட்டக் கல்வித் துறை வளா்ச்சிக்கு ரூ.10 லட்சத்துக்கான நிதியை அமைச்சா் ஒதுக்கீடு செய்துள்ளாா் என சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.