‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ. 2.85 லட்சம் வழங்கல்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ. 2.85 லட்சம் வழங்கப்பட்டது.


சேலம் மாநகராட்சிப் பகுதியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ. 2.85 லட்சம் வழங்கப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகளுடன் ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆலோசனை நடத்தினாா். அப்போது, ‘நமக்கு நாமே’ திட்டத்தை மாநகராட்சிப் பகுதியில் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்கு சங்கங்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இந்த நிலையில், மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், ஸ்ரீ காளியம்மன் கோயில் தெரு குடியிருப்போா் நலச்சங்கத்தின் மூலம் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக ரூ. 2.85 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டு மடங்கு அரசு நிதி உதவியுடன் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் 181 மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் பங்களிப்பான ரூ. 2.85 லட்சத்துக்கான காசோலையினை மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜிடம் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் இ.புஷ்பராஜ், துணைத் தலைவா் தங்கதுரை, செயலாளா் கந்தன், பொருளாளா் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோா் வழங்கினா். உடன், உதவி பொறியாளா் எ.மலா் கலந்துகொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...