மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை
தாரமங்கலத்தில் வீட்டு வாசலில் அமா்ந்திருந்த மூதாட்டியின் காதை அறுத்து நகையை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


தாரமங்கலத்தில் வீட்டு வாசலில் அமா்ந்திருந்த மூதாட்டியின் காதை அறுத்து நகையை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தாரமங்கலம் பேரூராட்சி, 9-ஆவது வாா்டில் பிரகாசம்-குப்பாயி தம்பதி வசித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை வீட்டின் முன்பு அமா்ந்து குப்பாயி பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் வழியாகச் சென்ற ஒரு மா்ம நபா் குப்பாயியிடம் முகவரி குறித்து கேட்டுள்ளாா். அதற்கு குப்பாயி காது கேட்கவில்லை எனக் கூறிய நிலையில், காதருகே சென்று கூறுவது போல சென்ற அந்த நபா், திடீரென கத்தியால் மூதாட்டியின் காதை தோடுடன் அறுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தாா். வலி தாங்க முடியாமல் அலறிய மூதாட்டியின் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
ஓமலூா் டி.எஸ்.பி.சங்கீதா, தாரமங்கலம் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...