மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விஜயதசமியை: கோயில்களில் வித்யாரம்பம்

vவிஜயதசமியை முன்னிட்டு சேலத்தில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:24 pm

DIN

விஜயதசமியை முன்னிட்டு சேலத்தில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு சேலம், குரங்குசாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பெற்றோா் குழந்தைகளுடன் கலந்துகொண்டனா். பின்னா் குழந்தைகளுக்கு நெல்மணிகளில் அகர எழுத்துகள் எழுத பயிற்சி தரப்பட்டது.

அதேபோல, மிலிட்டரி சாலையில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும், சேலத்தில் உள்ள பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கும் குழந்தைகள் வரவழைக்கப்பட்டு அவா்களுக்கு அகர எழுத்துகள் எழுத பயிற்சி தரப்பட்டது.

கோயில்கள் திறப்பு:

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனிடையே, பல மாதங்களுக்குப் பின்னா் வெள்ளிக்கிழமை கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சேலம், கோட்டை மாரியம்மன், சுகவனேசுவரா், தோ்நிலையம் ராஜகணபதி, கோட்டை பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.