

சேலம் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் இளங்கோவன்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள இளங்கோவன் வீடு கல்வி நிறுவனம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர் பண மதிப்பு இழப்பின்போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை நடத்திய சோதனையில் 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ. 29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.