மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு நாள் அனுசரிப்பு

வாழப்பாடியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19 வது நினைவு தினம், புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
வாழப்பாடியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள்.
Updated On :27 அக்டோபர் 2021, 9:59 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19 வது நினைவு தினம், புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

வாழப்பாடியிலுள்ள இவரது நினைவிடத்தில் மலர் துாவியும், பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனான, மாநில கிராம தொழிலாளர் சம்மேளன நிர்வாகி இராம கர்ணன் தலைமையில்,   குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முனுசாமி, மாநகர கலைப்பிரிவு நிர்வாகி பாலகிருஷ்ணன், வாழப்பாடி நகர தலைவர் ரவிமணி மற்றும்  நிர்வாகிகள் சங்கரய்யா,  செந்நிலவன், ஆனந்தன்,  முரளி , பிரபாகரன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.