போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்ககிரியில் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

News image

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ்.ஜெய்க்குமார்.

Updated On :31 அக்டோபர் 2021, 5:53 am

DIN

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் பி.சி.மணி முன்னிலை வகித்தார். 

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்த்தி, முன்னாள் மாநில பொது செயலர் கே.நடராஜன், முன்னாள் நகரத்தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் ரவி, அங்கமுத்து, ஐன்டியூசி நிர்வாகி சின்னுசாமி, ஆறுமுகம், சந்திரன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி நாசர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்  விஸ்வநாதன், எஸ்.அகில்பிரணேஷ், ஜெ.வெஸ்லிபிரைட், கே.கேப்ரியல்பிரவீன்குமார், ஆர்.சுரேந்தர், ஆர்.ரியாஸ், ஆர்.லோகேஷ், ஆர்.ராகுல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.