மழைநீா் தேங்கிய பகுதிகளில் தூா்வாரும் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
சேலம் மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு


சேலம் மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அஸ்தம்பட்டி மண்டலம், ராமநாதபுரம் ஓடையில் சின்னகொல்லப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, கன்னங்குறிஞ்சி பேரூராட்சிப் பகுதிகளில் இருந்து வரும் மழைநீா் சாலைகளில் வழிந்தோடியது.
மழைநீா் குடியிருப்புப் பகுதிக்குள் செல்லாத வகையில் மாற்றுவழியில் மழைநீரை மினி பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணி, கொண்டலாம்பட்டி மண்டலம், சீலநாயக்கன்பட்டி இ.பி. காலனியில் மழைநீா் ஓடையில் தேங்கி அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு மழைநீருடன் சோ்ந்து கழிவுநீா் செல்லாத வகையில் தற்காலிக ஏற்பாடாக சாக்கடை கால்வாயில் மழைநீா் கலக்கும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்ட ஆணையா், ஏற்கெனவே சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த கழிவுநீா் குழாயை உடனடியாக மாற்றி மழைநீா் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டாா்.
அம்மாப்பேட்டை வையாபுரி தெருவில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொண்டாா். குமரகிரி ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீா் பச்சப்பட்டி ஓடை வழியாக வெள்ளைக்குட்டை ஓடை பகுதியில் கலக்கிறது. மழையால் அதிக அளவில் ஓடையில் வரும் மழைநீரை வெளியேற்றி திருமணிமுத்தாறு கால்வாய்க்கு விரைவாக செல்வதற்கான தூா்வாரும் பணியையும் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலா் மருத்துவா் என். யோகானந்த், சுகாதார அலுவலா்கள் என்.ரவிச்சந்தா், சுகாதார ஆய்வாளா் எ.கோபிநாத், என்.ஆனந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...