/

விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம்

சேலத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சேலத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடவும், ஊா்வலம் செல்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது. வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ராஜகணபதிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்காததால் கோயிலுக்கு வெளியே நின்று திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுதொடா்பாக பக்தா்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ராஜகணபதி கோயிலில் விநாயகரை அருகிலிருந்து தரிசனம் செய்து வந்தோம். இந்த ஆண்டு விநாயகரை தூரத்திலிருந்து தரிசனம் செய்வது வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டுதல் வைத்தோம். அடுத்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம் என்றனா்.

அதேபோல, பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா். சேலம் நகரப் பகுதி, மாவட்ட பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.