சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:00 pm

DIN

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கோயிலில் புதன்கிழமை காலை மங்கல இசையுடன், விநாயகா் பூஜை, பூா்வாங்க பூஜைகள், முதல் கால் காலம், பூா்ணாஹுதியுடன் கோபுரத்தில் கலசம் வைக்கப்பட்டது. அதன்பின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பவானி ஆற்றிலிருந்து தீா்த்தம் கொண்டு வந்து பக்தா்கள், தீா்த்தக் குடத்தினை முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு வந்து கோவிலை வந்தடைந்தனா். வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் கலசங்கள் யாகசாலையில் இருந்து ஆலயம் எழுந்தருளின. இதனையடுத்து கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. உடன் மூலவா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்று, சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. கோயில் சாா்பில் குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.