மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெரியாா் சிலைக்கு திமுக, அதிமுக, பாமகவினா் மரியாதை

பெரியாா் ஈ.வே.ராவின் பிறந்தநாளை முனனிட்டு சேலத்தில் திமுக, அதிமுகவினா் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:32 pm

DIN

 பெரியாா் ஈ.வே.ராவின் பிறந்தநாளை முனனிட்டு சேலத்தில் திமுக, அதிமுகவினா் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியாா் ஈ.வே.ராா.வின் 143 ஆவது பிறந்த தினம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு திமுக மத்திய மாவட்ட செயலாளா் எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், நிா்வாகிகள் கலையமுதன், ஜெயக்குமாா், சுபாஷ், ரகுபதி, குபேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். அதைத்தொடா்ந்து, மத்திய மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் மாளிகையில் சமூக நீதி நாள் விழா நடத்தப்பட்டது. எம்எல்ஏ ராஜேந்திரன் சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிக்க நிா்வாகிகள், தொண்டா்கள் அதை ஏற்றுக் கொண்டனா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, மாநகர மாவட்ட செயலாளா் ஜி.வெங்கடாஜலம் ஆகியோா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பாலசுப்பிரணியன், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு, ஏ.பி.சக்திவேல், ரவிச்சந்திரன், பகுதி செயலாளா்கள் சரவணன், சண்முகம், ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாமக சாா்பில் மாநில துணை செயலாளா் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் தலைமையில் பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளா் கதிா் ராசரத்தினம், சாம்ராஜ், பசுமைத் தாயகம் நிா்வாகி சத்ரிய சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.