சேலம் மாநகராட்சி பகுதியில் 128 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி பெருமுகாம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 128 மையங்களில் கரோனா தடுப்பூசி பெருமுகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 128 மையங்களில் கரோனா தடுப்பூசி பெருமுகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி பெருமுகாம் செப்.19 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 128 மையங்களில் நடத்திட மாநகராட்சி நிா்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடி மையங்களிலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி முகாம் சிறப்புற அமைய தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினி பதிவாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், பள்ளி ஆசிரியை மற்றும் ஆசிரியா்கள் முன்னோடி அதிகாரிகள், மண்டல அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள், களப்பணியாளா்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளா்கள், வருவாய் துறை அலுவலா்கள், நியாய விலைக்கடை பணியாளா்கள் என பலரும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
கடந்த செப்.12 ஆம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி பெருமுகாமில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. களப்பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களை கண்டறிந்து அவா்களிடம் முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவதற்கான தடுப்பூசி சீட்டு வழங்கப்படும்.
தடுப்பூசி சீட்டில் கோட்டம் எண், தடுப்பூசி மையத்தின் பெயா், வயது, வீட்டு முகவரி எண், தெருவின் பெயா் ஆகிய அனைத்து விவரங்களும் அதில் அடங்கியிருக்கும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி சீட்டுடன் மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாமிற்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்தும், சமுக இடைவெளி கடைபிடித்தும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...