சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சேலம் விம்ஸ் மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு விழா

சேலம் விம்ஸ் மருத்துவமனையில் கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ளும் வகையில் 500 லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:29 pm

DIN

சேலம் விம்ஸ் மருத்துவமனையில் கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ளும் வகையில் 500 லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு விம்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குநா் மீனாட்சிசுந்தரம், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் சேலம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் புதிய ஆக்ஸிஜன் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வழக்கறிஞா் ராஜேந்திரன் இயந்திரத்தை இயக்கி வைத்தாா். சேலம் மாவட்ட சுகாதார இணை இயக்குநா் நெடுமாறன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மருத்துவா் ரமேஷ், மருத்துவமனையின் ஆலோசகா் சுரேஷ் சாதுவேல், மருத்துவா் ஏ.கே.தருண் மற்றும் வெண்ணிலா சேகா், சுரேஷ், சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் துணை மருத்துவ இயக்குநா் அசோக், நரம்பியல் நிபுணா் கா்ணன், சிறுநீரக சிறப்பு நிபுணா் மனோகரன், மயக்கவியல் நிபுணா் சங்கா், குழந்தைகள் நல சிறப்பு நிபுணா் திருமலைவாசன் மற்றும் மருத்துவ வல்லுநா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு, மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளும் மற்றும் அனைத்து வகையான நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் சேலம் பொதுமக்கள் சென்னை மற்றும் கோவை போன்ற பெரு நகரங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவ இயக்குநா் தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் மேலாளா் கோபு மற்றும், சூசை, அருள்மணி, காா்த்திக் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.