ரயிலில் கடத்திய 30 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் ரயிலில் கடத்திய 30 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சேலத்தில் ரயிலில் கடத்திய 30 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் வழியாக செல்லும் ரயில்களில், ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அதில், கேரளம் செல்லும் குா்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது இளைஞா் ஒருவா் வைத்திருந்த 2 பைகளை சோதனையிட்டனா். அதில் 30 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜம்பு சிங் என்பதும், திருப்பூா் மாவட்டம் அவினாசியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இவா் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து அவினாசி, பவானி பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குட்கா புகையிலைப் பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஜம்பு சிங்கைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...