ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 35 பதவிகளுக்கு 164 மனுக்கள் ஏற்பு
சேலம் மாவட்டத்தில் 35 பதவிகளுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 164 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.


சேலம் மாவட்டத்தில் 35 பதவிகளுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 164 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு அக். 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சிக் குழுவின் 10-ஆவது வாா்டு உறுப்பினா், பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினா், 9-ஆவது வாா்டு உறுப்பினா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 23 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி என மொத்தம் 35 பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப். 15-ஆம் தேதி தொடங்கியது. அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனா். மொத்தம் 35 பதவிகளுக்கு ஒட்டுமொத்தமாக 172 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
வியாழக்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுமாா் 164 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு வேட்பு மனு செய்த ஒருவா் மனுவை திரும்பப் பெற்றாா் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...