சங்ககிரியில் ரூ. 5 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
சங்ககிரி அருகே உள்ள ஆவரங்கம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞா் ஒருவரை கைது செய்தனா்.


சங்ககிரி அருகே உள்ள ஆவரங்கம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞா் ஒருவரை கைது செய்தனா்.
சங்ககிரி அருகே உள்ள ஒருக்கமாலை அடிவாரம், ஆவரங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்து விற்பனை செய்து வருவதாக சங்ககிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து, சங்ககிரி காவல் ஆய்வாளா் தேவி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் சோதனை நடத்தியதில், சங்ககிரி, பால்வாய் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் (22), தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 918 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அரவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...