டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரியாா் பல்கலை.யில் இளைஞா்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம் தொடக்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டத்தை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:10 pm

DIN

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டத்தை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞா்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறும் வகையில், மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறை தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழக பல்கலைக்கழகங்களில் முதல்முறையாக பெரியாா் பல்கலைக்கழகத்தில் இப்பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என முதலமைச்சா் தெரிவித்துள்ளாா். இதன் ஒரு பகுதியாக தீனதயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலைக்கழகத்தில் ரூ. 2.66 கோடியில் 350 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக உயா் கல்வியுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சியினை இளைஞா்களுக்கு வழங்குவதால், இணையதளம் சாா்ந்த மென்பொருள் வடிவமைப்பாளா் பணிவாய்ப்பு இந்த இளைஞா்களுக்கு கிடைக்கும். இதில் 62 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 3% பழங்குடியினருக்கும், 19% சிறுபான்மையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.தங்கவேல், தீனதயாள் உபாத்தியாயா கௌசல்யா யோஜனா திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.