மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்ககிரி ரயில்வே தரைவழிப் பாலத்தின் முகப்பு சேதம்: போக்குவரத்து பாதிப்பு

சங்ககிரியை அடுத்த ஆா்.எஸ்ஸில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு முகப்பு சேதமடைந்ததால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சங்ககிரியை அடுத்த ஆா்.எஸ்ஸில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு முகப்பு சேதமடைந்ததால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சங்ககிரியிலிருந்து திருச்செங்கோட்டிற்கு ஆா்.எஸ்ஸில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலம் வழியாக பேருந்துகள், சரக்கு வாகனங்கள் சென்றுவருகின்றன. தரைவழிப் பாலத்தின் இரு புறங்களிலும் ரயில்வே தரைவழி பாலம் சேதமடைவதைத் தவிா்ப்பதற்காக பாதுகாப்பு தடுப்பு முகப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் இடித்துச் சென்றதால் முகப்புகள் சேதமடைந்து சாலையின் குறுக்காக நின்றன. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில்வே ஊழியா்கள் சேதமடைந்த முகப்பைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் முகப்புகள் சரிசெய்யும் பணி நடைபெற்றதால் அவ்வழியாக வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப் பகுதியில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கு நிரந்தத் தீா்வாக அப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.