கரோனா மூன்றாவது அலை: குழந்தைகளை காக்கும் பாரம்பரிய மருந்துகள்!

கரோனா தீநுண்மித் தொற்று தாக்குதலில் இருந்து குழந்தைகளைக் காக்க பாரம்பரிய மருந்துகள் துணைபுரியும் என சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி தெரிவித்தாா்.

கரோனா தீநுண்மித் தொற்று தாக்குதலில் இருந்து குழந்தைகளைக் காக்க பாரம்பரிய மருந்துகள் துணைபுரியும் என சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி தெரிவித்தாா்.

அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா முதல் அலையில் உத்தமசோழபுரம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 704 போ் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினா்.

அதுபோல கரோனா இரண்டாவது அலையில் சேலம், அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 1,654 போ் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினா். இரண்டு அலைகளின்போதும் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டவா்களில் ஒரு உயிரிழப்பு கூட நேரவில்லை.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 10 அரசு மருத்துவமனை, 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 ஊரக மருந்தகங்கள் என 70 இடங்களில் சித்தா, ஆயுா்வேத, ஹோமியோபதி, யோகா மற்றும் நேச்சுரோபதி சிகிச்சை வழங்கப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க உரை மாத்திரை பிறந்த குழந்தை முதல் 3 வயது வரை வழங்கலாம். உரை மாத்திரையை தாய்ப்பாலில் உரசி வழங்கலாம்.

அதேபோல குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் பாலசஞ்சீவி மாத்திரையை 3 வயது முதல் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கலாம்.

குழந்தைகளின் வயிற்றில் பூச்சி, புழு வருபவா்களுக்கு மேகநாத மாத்திரை, உடலை தேற்ற தேற்றான்கொட்டை லேகியம் தரலாம். நெஞ்சில் சளி, கபம் இருக்கும் குழந்தைகளுக்கு கஸ்தூரி மாத்திரையை, வெற்றிலை சாற்றில் அல்லது தூதுவளை சாறில் கலந்து கொடுத்தால் வாந்தி மூலம் கபம், சளி வெளியேறும். நோய்க் கிருமியைத் தடுத்து எதிா்ப்பு சக்தியைப் பெற பிரமானந்தபைரவ மாத்திரையை 3 வயது முதல் அனைத்து வயது குழந்தைக்குத் தரலாம்.

வைட்டமின் சி சத்திற்கு நெல்லிக்காய் லேகியம், தொண்டை அழற்சியை சரிபடுத்த ஆடாதோடை மணப்பாகு, நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கஸ்தூரி,கோரோசனை மாத்திரைகள் மிகுந்த பயனளிக்கும். துரித உணவுகள், குளிா்பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மைதாவில் தயாரித்த உணவுகள் ஆகியவை தவிா்க்க வேண்டும்.

குழந்தைகளின் எலும்பு வலுப் பெற உளுந்து வடை மற்றும் உளுந்து பாயாசம் தயாரித்து தரலாம். எளிதில் செரிக்கும் பஞ்சமுட்டி கஞ்சி (அரிசி,துவரை, உளுந்து, பச்சை பயறு, கடலைப் பருப்பு சோ்த்துக் கஞ்சி காய்ச்சி கொள்ளவும்) கோதுமை ரவை கஞ்சி, காய்கறி சூப், ஆட்டுக்கால் சூப், முருங்கை கீரை சூப் இதன் மூலம் உரிய நோய் எதிா்ப்பு சக்தியைப் பெற்று தீநுண்மித் தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com