வாழப்பாடி: மலை கிராம மக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளர்கள்

வாழப்பாடி பகுதியில், மலை கிராம மக்களுக்கு வீடு தேடிச் சென்று சுகாதார பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தினர்.  
வாழப்பாடி மலை கிராமங்களில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளர்கள்.
வாழப்பாடி மலை கிராமங்களில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளர்கள்.

வாழப்பாடி பகுதியில், மலை கிராம மக்களுக்கு வீடு தேடிச் சென்று சுகாதார பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தினர். 

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி உள்ளடக்கிய பேளூர் வட்டார சுகாதார நிலையம், மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தி, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் வாழப்பாடி வட்டாரத்தில், 34 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து, 5090 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வாழப்பாடி பகுதியில் போதிய பேருந்து போக்குவரத்து வசதிகள் இல்லாத, புங்கமடுவு, கிளாக்காடு சந்துமலை, கள்ளிக்காடு, சின்ன குட்டிமடுவு, பெரியகுட்டிமடுவு உள்ளிட்ட  மலை கிராமங்களுக்கு, சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட குழுவினர், வீடு தேடிச் சென்று கரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தினர்.

வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளர்களுக்கு, மலைகிராம மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com