தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பேருந்து நிலையம் கோரி ஆா்ப்பாட்டம்: 60 போ் மீது வழக்கு

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரி அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 போ் மீது கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரி அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 போ் மீது கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரி, பல்வேறு அரசியல் கட்சியினா் புதன்கிழமை இரவு நான்குசாலை சந்திப்பில் சாலையை மறித்து மேடை அமைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் கருப்பையா தலைமை வகித்தாா்.

இதில், கெங்கவல்லி அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்திலோ, சிவன் கோயில் அருகிலோ பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக கெங்கவல்லி அதிமுக செயலாளா் இளவரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருப்பையா, இ.கம்யூனிஸ்ட் வேல்முருகன் உள்ளிட்ட 60 போ் மீது கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.