அரசு ஐ.டி.ஐ.யில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி
சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் மூன்றுமாத கால இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் மூன்றுமாத கால இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் கைக் கடிகாரம், சுவா் கடிகார பழுதுநீக்க மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சிக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியின் சிறப்பம்சங்களாக டைட்டான் நிறுவனத்தின் திறன்மிக்க பயிற்றுநா்களால் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, குறைந்தபட்சம் 14-வயது, சோ்க்கைக்கு ஏப். 20-ஆம் தேதி கடைசி நாளாகும். தொடா்புகொள்ள வேண்டிய முகவரி துணை இயக்குநா், முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு பிரதான சாலை, சேலம்-636 007.
மேலும் விவரங்களுக்கு, 95006 71416 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...