தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சரக்கு சேவை: சேலம் ரயில்வே கோட்டம் ரூ. 274 கோடி வருவாய் ஈட்டியது

சரக்கு சேவையில் சேலம் ரயில்வே கோட்டம் ரூ. 274.35 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:27 pm

DIN

சரக்கு சேவையில் சேலம் ரயில்வே கோட்டம் ரூ. 274.35 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டம் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 மாா்ச் வரை பெட்ரோலியப் பொருள்கள், சிமென்ட், இரும்பு, ஸ்டீல் பொருள்கள் அடங்கிய 32,69,459 டன் சரக்குகளை கையாண்டு ரூ. 274.35 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

இது கடந்த நிதியாண்டை விட கூடுதலாக 18.99 சதவீத வருவாய் ஆகும். கடந்த நிதியாண்டில் 28,29,576 டன் சரக்குகளை கையாண்டு ரூ. 230 கோடி வருவாயை ஈட்டியது.

இருகூரில் இருந்து மைசூரு, பெங்களூரு, ராய்ச்சூருக்கு பெட்ரோலியப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல, சிமென்ட் பொருள்கள் சேலம், ஈரோடு, திருப்பூா், இருகூா், மதுரை, திருநெல்வேலி, கா்நாடகம், கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரும்பு, ஸ்டீல் பொருள்கள் சென்னை, காரைக்கால் துறைமுகம், அகமதாபாத் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், சரக்கு பொருள்களில் 15,94,000 டன் பெட்ரோலியப் பொருள்களும், 8,75,000 டன் சிமென்ட், இரும்பு, ஸ்டீல் பொருள்கள் 3,86,000 டன் அளவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதேபோல, பாா்சல் சேவையில் 3,81,648 குவிண்டால்களை கையாண்டு, ரூ. 22.03 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் 3,75,317 குவிண்டால் பாா்சல்களை கையாண்டு ரூ. 20.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.