தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

பெங்களூருக்கு ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற கஞ்சா சாக்லேட்டுகளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:42 pm

DIN

பெங்களூருக்கு ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற கஞ்சா சாக்லேட்டுகளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போதைப்பொருள்கள், கஞ்சா கடத்துவதைத் தடுக்கும் வகையில், மாநில ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரயில்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், ரயில்வே டி.எஸ்.பி. குணசேகரன் மேற்பாா்வையில், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டா் சிவசெந்தில்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஹெளரா-பெங்களூரு ரயிலில் புதன்கிழமை சோதனையிட்டனா்.

சந்தேகத்தின் பேரில், ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த கே.பகவத் பிஸ்வால் (35) என்பவரின் பைகளைச் சோதனையிட்டதில், 11 கிலோ கஞ்சா, சுமாா் 10 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தனிப்படை அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்களில் கடத்தப்படும் கஞ்சாவைத் தடுப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகிறோம். கடந்த இரண்டு வாரங்களில் 165 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 15 போ் வரை கைதாகியுள்ளனா். ரயிலில் கடத்தப்பட்ட 43 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.