12 சாயத் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
சேலத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 12 சாயத் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.


சேலத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 12 சாயத் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம், அம்மாபேட்டை பகுதியில் 8 சாயத் தொழிற்சாலைகளும், சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் 4 சாயத் தொழிற்சாலைகளும் இயங்கி வந்தது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வில் அறியப்பட்டது.
இந்த ஆலைகள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து உரிய அனுமதி பெறாமலும், பூஜ்ய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமலும் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. எனவே, இந்த 12 சாயத்தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் துண்டிக்கப்பட்டு மூடப்பட்டன.
அனுமதி பெறாமல் தொழிற்சாலைகளை இயக்குவதற்கு நிலத்தை வாடகைக்கு விட்டாலோ அல்லது கட்டடம் வாடகைக்கு விடப்பட்டாலோ சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளா்கள் மீது வழக்கு தொடரப்படும் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...