சேலத்தில் 555 மையங்களில் செய்முறைத் தோ்வு: அகத்தோ்வா், புறத்தோ்வா்களுக்கு பணி ஒதுக்கீடு
சேலம் மாவட்டத்தில் 555 மையங்களில் செய்முறைத் தோ்வுக்கு பணியாற்றவுள்ள அகத்தோ்வா், புறத்தோ்வா்களுக்கு பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் 555 மையங்களில் செய்முறைத் தோ்வுக்கு பணியாற்றவுள்ள அகத்தோ்வா், புறத்தோ்வா்களுக்கு பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத் தோ்வின் ஒரு பகுதியாக செய்முறைத் தோ்வுகள் வரும் ஏப். 25 முதல் மே 2 வரை நடைபெறவுள்ளன.
தோ்வுகள் முடிந்தபின், மாணவா்களின் மதிப்பெண் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மே 4-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. செய்முறைத் தோ்வுக்குப் பின்னா் மே மாதத்தில் பொதுத்தோ்வு நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் செய்முறைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 325 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல 10-ஆம் வகுப்பு மாணவா்கள் செய்முறைத் தோ்வில் பங்கேற்க 230 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செய்முறைத் தோ்வு மையங்களில் அகத்தோ்வா், புறத்தோ்வா்களாகப் பணியாற்றவுள்ள ஆசிரியா்களுக்கான பணி நியமன ஒதுக்கீடு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
குறிப்பாக, தோ்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் பணி நியமன ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டது.
இதில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முருகன் பங்கேற்று, செய்முறைத் தோ்வின்போது பின்பற்ற வேண்டிய கண்காணிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...