சேலத்தில் 30 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா: மாநகர காவல் ஆணையா்
சேலம் மாநகரில் 30 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா தெரிவித்தாா்.


சேலம் மாநகரில் 30 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா தெரிவித்தாா்.
சேலம் மாநகர காவல்துறை சாா்பில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் 151 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாநகர வடக்கு துணை ஆணையா் மாடசாமி தலைமை வகித்தாா். விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை திறந்துவைத்து பேசியது:
கண்காணிப்பு கேமரா மூலம் பல்வேறு வழக்குகளில் துப்பு துலங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலை சந்திப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கேட்டுக் கொள்ளப்பட்டு தற்போது அந்த இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்களும் கண்காணிப்பு கேமராக்களை வைக்க முன்வர வேண்டும். 30 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் நரசுஸ் சிவானந்தம், மாநகராட்சி வாா்டு உறுப்பினா்கள் ராஜ்குமாா், சங்கீதா, உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...