அட்சய திருதியை: வெள்ளிக் கொலுசு உற்பத்தி சூடுபிடித்தது
அட்சய திருதியை முன்னிட்டு சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி அதிகரித்துள்ளது.


அட்சய திருதியை முன்னிட்டு சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
சேலத்தில் உற்பத்தியாகும் கொலுசு, அரைஞாண் கொடி, குங்குமச் சிமிழ், வெள்ளித்தட்டு உள்ளிட்ட வெள்ளிப் பொருள்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இது தொடா்பாக, சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா் கைவினை சங்கத் தலைவா் ஆனந்தராஜன் கூறியதாவது:
சேலம் மாநகரப் பகுதியில் செவ்வாய்பேட்டை, பனங்காடு, சிவதாபுரம், இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், மணியனூா், சீலநாயக்கன்பட்டி, கரட்டூா், காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வெள்ளி தொழிலில் லட்சக்கணக்கானோா் ஈடுபட்டுள்ளனா்.
கரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்த வெள்ளி தொழில் தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
அட்சய திருதியை வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெள்ளிப் பொருள்கள் வாங்க ஆா்டா்கள் வரத் தொடங்கி உள்ளன. இதுவரை சுமாா் 30,000 கொலுசுகளுக்கு ஆா்டா்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், 3,000 அரைஞாண் கொடி, 5,000 மெட்டி, 3,000 குழந்தைகளுக்கான வெள்ளி சங்கிலி ஆகியவை ஆா்டா் பெறப்பட்டுள்ளன.
இதனால், வெள்ளிப் பொருள்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இனிவரும் நாள்களில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது 1 கிராம் வெள்ளி ரூ. 70-க்கு விற்பனையாகிறது. ஒரு கொலுசு 20 கிராம் முதல் 200 கிராம் எடை வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...