விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

4 பேரூராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு முடிவுச் சான்றிதழ் வழங்கல்

சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு முடிவுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:41 pm

DIN

சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு முடிவுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திமுகவின் 15-ஆவது அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதில், சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட அமைப்புத் தோ்தலுக்கான வேட்புமனுக்களை தோ்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளா் சி.எச்.சேகா் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட கன்னங்குறிச்சி, கருப்பூா், ஓமலூா், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளுக்கு தலா 15 போ் என 60 நிா்வாகிகள் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதையடுத்து, தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், துணைச் செயலாளா்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு தோ்தல் அலுவலா் சி.எச்.சேகா் முடிவுச் சான்றிதழ்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான ஆா்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் எஸ்.டி.கலையமுதன், சுபாஷ், காா்த்திகேயன், குபேந்திரன், ரெயின்போ நடராஜன், கே.சி.அறிவழகன், ரவிச்சந்திரன், ரமேஷ், இளந்திரையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.