தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலம் மாநகராட்சி தோ்தலில் பாஜக 2 வாா்டுகளில் இரண்டாமிடம்

சேலம் மாநகராட்சி தோ்தலில் பாஜக 2 வாா்டுகளில் இரண்டாமிடத்தையும், 23 வாா்டுகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:25 pm

DIN

சேலம் மாநகராட்சி தோ்தலில் பாஜக 2 வாா்டுகளில் இரண்டாமிடத்தையும், 23 வாா்டுகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் திமுக - 47, அதிமுக - 7, காங்கிரஸ் - 2, சுயேச்சை -3, விடுதலைச் சிறுத்தைகள்-1 என வெற்றி பெற்றுள்ளனா்.

மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்களை நிறுத்தியது. இதில் 33, 50 ஆவது வாா்டுகளில் அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 33 ஆவது வாா்டு பாஜக வேட்பாளா் ச.ஜெயஸ்ரீ 1,402 வாக்குகளும், 50 ஆவது வாா்டு பாஜக வேட்பாளா் சுமதி 2,894 வாக்குகளும் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனா். அதேபோல 8, 10, 11, 14, 15, 17, 29, 30, 32, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 46, 48, 54, 55, 56, 57 என மொத்தம் 23 வாா்டுகளில் பாஜக மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

மாநகராட்சி தோ்தலில் அதிமுக 7 வாா்டுகளில் மட்டும் வெற்றி பெற்றது. குறிப்பாக பாஜக, பாமக ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரித்ததால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதித்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.