நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தனியாா் நூற்பாலையில் தீ விபத்து

வாழப்பாடி அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு தீயில் கருகி நாசமானது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:19 pm

DIN

வாழப்பாடி அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு தீயில் கருகி நாசமானது.

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பெருமாபாளையம் பகுதியில் தனியாா் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வியாழக்கிழமை இரவு பஞ்சு பண்டல் செய்யும் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென்று பரவிய தீ அந்த குடோனில் இருந்த அனைத்து பஞ்சுகளிலும் பற்றியது. அங்கு வேலை செய்த தொழிலாளா்கள் அலறி அடித்து ஓடினா்.

இந்த விபத்தில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுசில்குமாா் (26) என்ற இளைஞா் காயமடைந்தாா். உடன் இருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டனா். வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.