புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேட்டூர் அருகே வீட்டுக்குள் புகுந்த லாரி

மேட்டூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வீட்டுக்குள் புகுந்ததில் வீடு சேதமடைந்து, லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.  

News image
Updated On :2 ஜனவரி 2022, 5:20 am

DIN


மேட்டூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வீட்டுக்குள் புகுந்ததில் வீடு சேதமடைந்து, லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.  

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து இரும்பு தாது ஏற்றிய பல்கர் லாரி கேரள மாநிலம் கொச்சிக்கு வந்துகொண்டிருந்தது. இன்று காலை மேட்டூரை அடுத்த கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள வேகத்தடையில் ஏறும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.

பெரிய மரத்தின் மீது மோதிய லாரி சுந்தரம் என்பவரது வீட்டுக்குள் புகுந்தது. லாரியானது, வீட்டின் அருகே நிறுத்தி இருந்த ரத்தினம் என்பவருக்குச் சொந்தமான காரையும் சேதப்படுத்தி வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

லாரி ஓட்டுநர் முருகேசன் (45) பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.